Sunday, September 6, 2015

திருமணம் வறுமையை போக்கும்: திருக்குர்ஆனை உண்மைப்படுத்தும் ஆய்வுகள்


“உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தனவந்தர்களாக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.”
(திருக்குர்ஆன் : 24:32)


திருமணம் செய்வோர் ஏழைகளாக இருந்தால் திருமணத்தின் காரணமாக இறைவன் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்குவான் அதாவது, திருமணத்துக்குப் பிறகு தன்னிறைவு பெற்றோராக ஆக்குவதை இவ் வசனம் கூறுகிறது.
திருமணமத்தின் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் திருமணம், குழந்தைகள் வறுமைக்கு வழிவகுக்கும் என்று மக்கள் எண்ணுவது தவறானது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வறுமையை போக்கி மகிழ்ச்சியான வாழ்விற்கு திருமணம் செய்து கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

“வறுமையில் இருந்து விடுபட திருமணம் ஒரு வழியாக இருக்கும்” என்கிறார் ஒஹியோ பல்கலைக்கழக பேராசிரியர் Dr. Daniel T. Lichter.
image
(Dr. Daniel T. Lichter is the Ferris family professor in the Department of Policy Analysis and Management, and Professor of Sociology.)
ஒஹியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் Jay Zagorskyfound அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருமணம் செய்த ஒவ்வொருவரும் திருமணம் புரியாமல் தனித்து இருப்பவர்களை விட இரு மடங்கு செல்வத்தை கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறார்.
image
(Jay Zagorsky, a research scientist at Ohio State University’s Center for Human Resource Research.)
“தாய்மார்களுடன் மட்டும் வளரும் குழந்தைகள்  (ஒற்றை பெற்றோர் முறை ஒரு மேற்கத்திய கலாச்சாரம் ஆகும்) இரு பெற்றோர்களுடன் வாழும் குழந்தைகளை விட ஐந்து மடங்கு ஏழ்மையானவர்கள்” என்று 2006 இல் வெளியான தனது  The Audacity of Hope என்ற நூலில் அமேரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டுகிறார்.
image

அமெரிக்க DeVos Center for Religion and Civil Society எனும் அமைப்பின் இயக்குனர் Jennifer A. Marshall அவர்களின் அறிக்கையில் வறுமைக் கோட்டில் வாழும் சிறுவர்களில் பிள்ளைகள் 2/3 பங்கினர் ஒற்றை பெற்றோர்களுடனேயே வாழ்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக அமேரிக்க அரசு வருடாந்தம் 300 பில்லியன் டாலர் செலவிடுவதாக குறிப்பிடுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில் அத்தாய்மார்கள் அப்பிள்ளைகளின் தந்தையை திருமணம் செய்யும் போது 2/3 பங்கு வறுமையில் இருந்து உடனடியாக விடுபடுவதாகவும் குறிப்பிடுகிறார்.
கலிபோர்னியாவின் பொதுமக்கள் கொள்கை நிலையம்  எனும் நிறுவனம் கடந்த பல தசாப்தங்களாக குடும்ப கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் குடும்ப கூட்டமைப்பிற்கு இடையிலான தொடர்பு என்பவற்றின் முக்கியத்துவஙகள், குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, வறுமை குறித்து ஆய்வு செய்தது. சிறுவர் வறுமை 1960 இல் வளர்ச்சியடைவதாக இந்த ஆய்வறிக்கையானது குறிப்பிடுகிறது. திருமண எண்ணிக்கைகளில் ஏற்பட்ட குறைவு, திருமணத்துக்கு முன்னரான குழந்தை பிறப்புகள் அதிகரித்தமை ஆகிய குடும்ப கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு காரணம் என இவ்வாய்வு கூறுகிறது.
image
1969 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரை வறுமை விகிதம அதிகரிப்பதை மேலுள்ள வரைபு காட்டுகிறது.
image


1970 லிருந்து 2006 வரை திருமண விகிதம் குறைவதை மேலுள்ள வரைபு காட்டுகிறது.

image

மேலுள்ள வரைபடம் 1970 முதல் 2006 வரை அமெரிக்க குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்குகிறது.
அமெரிக்க குடும்பங்களின் விகிதத்தில் ஒரு தெளிவான குறைவையும் மற்றும் பெண் குடும்பங்களின் அதிகரிப்பையும் வரைபடம் காட்டுகிறது.

image

ஆய்வின் படி, 2004 முதல் 1960 வரை திருமணத்திற்கு முன்பு தாய்மார்களுக்கு குழந்தைகள் பிறக்கும் சதவீதம் அதிகரிப்பதை மேலுள்ள வரைபடம் காட்டுகிறது. 2004 இல் அது 35% சதவீதத்தையும் தாண்டி விட்டது.

image


வறுமைக்கும், குடும்பக் கட்டமைப்புக்கும்  இடையே உள்ள தொடர்பை விளக்கும் இந்த அற்புதமான அட்டவணை பாருங்கள்.
வறுமைக்கும் குடும்ப கட்டமைப்புக்கும் தெளிவான தொடர்பு இருப்பதை இவ் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.
சர்வ வல்லமையும் பெற்ற அல்லாஹ்விற்கே எல்லா புகழும்!!!
வறுமை மற்றும் திருமணத்திற்கும் இடையேயான இந்த அறிவியல் இணைப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்பு எழுத படிக்க தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களால் சுயமாக எப்படி கூற முடியும்? நிச்சயமாக திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்று நிரூபணமாகிறது.
எல்லாம் வல்ல இறைவன் மேலும் திருக்குர்ஆனில் “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.”
(திருக்குர்ஆன் 17:31) என்கிறான்.
இந்த அறிவியல் உண்மை மூலம்  திருமணமே சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப வழி என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
“நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(திருக்குர்ஆன்  30:21).
References:
ஜசாக்கல்லாஹு ஹைரன்

No comments:

Post a Comment