“அல்லாஹ்வே விதைகளையும், கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்பவன். உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். அவனே அல்லாஹ். எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
(திருக்குர்ஆன் 6:95)"
(திருக்குர்ஆன் 6:95)"
மேலுள்ள வசனம் உணவு சுழற்சி குறித்து பேசுவதை நாம் அவதானிக்க முடிகின்றது.
ஓர் உயிரினம் இறந்ததும் நுண்ணங்கிகள் அவற்றை அழுகலடையச் செய்து விடுகின்றன. ஆகையால் இறந்த உடல் மண்ணில் கலக்கப்பட்ட கரிம / சேதன சேர்வைகளாக பகுக்கப்பட்டு தாவரங்கள், விலங்குகளது அடிப்படை உணவு மூலங்களாக மாற்றப்படுகின்றன. இச்சுழற்சி இடம் பெறாவிட்டால் உயிர் வாழ்க்கை சாத்தியமற்றது.
இறந்த தாவர, விலங்கு உடல்கள் புதிய அங்கி ஒன்றின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதை அவதானிக்க முடிகின்றது.
இச்சுழற்சி மாற்றமே அல்குர்ஆனில் “உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். அவனே அல்லாஹ்.” (திருக்குர்ஆன் 6:95) என்று மிகச்சிறந்த முறையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment