Saturday, September 5, 2015

நபிவழி ஆரோக்கியம்: பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது அவர்களை மூளை சிதைவில் இருந்து பாதுகாக்கும்


அஸ்மா பின்த் அபூபக்கர் அவர்கள் நிறை மாத கர்ப்பத்தோடு மதீனா வந்து சேர்ந்தார்கள். மதீனாவில் உள்ள குபா பள்ளியின் முற்றத்திலேயே
அவர்கள் தங்கினார்கள். அங்கேயே அவர்கள் அப்துல்லா பின் சுபைர் அவர்களை பெற்று எடுத்தார்கள். உடனே அந்த குழந்தையை எடுத்து வந்து நபிகள் நாயகத்தின் மடியில்
வைத்தார்கள் நபிகள் நாயகம் பேரித்தம் பழம் ஒன்றை எடுத்து தனது வாயில் வைத்து மென்று மென்மையாக்கி அதை அந்த குழந்தைக்கு வழங்கினார்கள். அந்த குழந்தைக்காக பிரார்தனையும் செய்தார்கள்.
" அந்த குழந்தை நபிகள் நாயகம் மதீனாவிற்கு வந்த பிறகு பிறந்த முதல் குழந்தையாகும். முஸ்லிம்களுக்கு குழந்தைகள் பிறக்காமலிருக்க யூதர்கள் சூனியம் வைத்துள்ளனர் என்று சொல்ல பட்டு வந்த நிலையில் இந்த குழந்தை பிறந்ததால் முஸ்லிம்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபு பக்கர் 
நூல் : புஹாரி "
பிறந்த குழந்தைகளுக்கு முதல்
உணவாக இனிப்பை வழங்குவதினால்
அவர்கள் மூளை சிதைவு நோயிலிருந்து இருந்து
பாதுகாக்கப்படுகின்றனர்
என்று நவீன ஆய்வுகள் உறுதி செய்கிறன.
இது குறித்து BBC வெளியிட்ட ஆய்வை இந்த Linkஇல் காணலாம். 
ஜசாக்கல்லாஹு ஹைரன்.


No comments:

Post a Comment