Monday, September 7, 2015

அல்குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்: அதிர்வுற்று வீக்கமடையும் மண் துணிக்கைகள்

“பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது அதிர்வுற்று, வீக்கமடைந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
    (திருக்குர்ஆன்  22:5)

image


இவ்வசனம் ஆரம்பத்தில் இலக்கிய வெளிப்பாடாக கருதப்பட்டது. எனினும் இவ் வசனம் மழை நேரங்களில் மண் மூலக்கூறுகளின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் பொருத்தமான முறையில் தொடராக விளக்கும் பல விஞ்ஞான உண்மைகளை உள்ளடக்கியது.


அல்குர்ஆனில் குறிப்பிடப்படும் இந் நிலைகளாவன :
1. மண் துணிக்கைகளது அதிர்வு 
2. மண் துணிக்கைகளது வீங்குகை 
3. மண்ணின் முளைப்பித்தல்

இவற்றை பின்வருமாறு விஞ்ஞான ரீதியாக விளக்க முடியும் :

1. மண் துணிக்கைகளது அதிர்வு : மழைத்துளிகளால் மண்துணிக்கைகள் மோதப்படும். இதனால் மண் துணிக்கைகள் நிலை மின்னேற்றம் காரணமாக அதிர்வதை போன்று நகரும். மழைத்துளி மண்ணில் விழும்போது மண் மூலக்கூறுகள் ஒரு வகை குலுக்கத்திற்கும் அதிர்விற்கும் உட்படுகிறன என்பதை ராபர்ட் பிரவுன் எனும் ஸ்காட்டிஷ் தாவரவியலாளர் 1827 இல் கண்டுபிடித்தார். இந்த இயக்கம் “பிரவுனிய இயக்கம்” என்று தற்போது அழைக்கப்படுகிறது.

2. மண் துணிக்கைகளது வீங்குகை : நீர் மூலக்கூறுகளை அகத்துறிஞ்சுவதன் காரணமாக மண் மூலக்கூறுகளது பருமன் அதிகரிக்கும். மண் துணிக்கைகளுக்கு இடையே காணப்படும் இடைவெளி நீர் மூலக்கூறுகள், கரைந்த அயன்கள் நுழைவதை அனுமதிக்கும். அவை மண் துணிக்கைகளுக்கிடையே பரவலடைந்து மண் துணிக்கைகளது பருமனை அதிகரிக்கும்.

3. மண்ணின் முளைப்பித்தல் : மண் துணிக்கைகளிடையே பரவலடைந்த நீர மண்ணின் ஒட்டற் பண்பினால் நீர் துணிக்கைகள் ஆழமான பகுதிகளில் ஊடுருவது தடுக்கப்படும். நீர் மண்ணின் ஆழமான பகுதிகளுக்கு ஊடுருவி சென்று விடுமாயின் தாவரங்கள் தமக்கு தேவையான நீரை பெற்றுக்கொள்ளாது இறந்துவிடும். எனினும் அல்லாஹ் இத்தன்மை கொண்டு மண்ணை படைத்திருப்பதானது  தாவரங்கள் அழியாது அழகான ஒவ்வொரு வகையையும் முளைப்பிக்கச் செய்ய இன்றியமையாததாகும்.
“இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்று. அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.”
(திருக்குர்ஆன்  36:33)
வரண்ட பூமியில் விழுந்த மழைத்துளியின் நிலைகளது அறிவியல் விளக்கங்களை அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் துல்லியமாக விவரிப்பது அது இறை வேதம் என்பதற்கு ஓர் சான்றாகும்.

No comments:

Post a Comment