Sunday, September 6, 2015

நபி வழியில் உள ஆரோக்கியம்: கவரக் கூடிய பெண்களின் அருகில் தனித்து இருப்பது இதயத்திற்கு ஆபத்தானது

ஒரு ஆண் பெண்ணிடம் தனித்து இருப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

இது கு‌றி‌த்து  ஸ்பெயின், வலெந்ஸீய பல்கலைக்கழக ஆய்வாளர்களின் முடிவுகள் கீழே தரப்படுகிறது.
கவரக் கூடிய பெண்களின் அருகில் 5 நிமிடங்கள் தனித்து இருப்பது ஆணின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து இதயத்தை பாதிக்கும். இதன் போது ஆணின் பதட்டம் ஒரு விமானத்தில் இருந்து குதிப்பது போன்றதாகும் என்கிறனர் ஆய்வாளர்கள்!!
இதனால் Cortisol ஒமோனின் மட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட கூடிய வாய்ப்பும் உண்டு எனவும் கூறுகிறனர்.
நீண்ட நேர இவ்வாறான உடல் / உள அழுத்தமானது நாள்பட்ட உயர் Cortisol ஒமோனின் மட்டத்திற்கு காரணமாக அமையும். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், ஆண்மை குறைவு போன்ற சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்! இஸ்லாத்தின் எந்த ஒரு நியதியும் மனித இனத்திற்கு தீங்கானது அன்று!
“நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.” (அல்குர்ஆன் 33:32,33)
உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
(நூல்: அஹ்மத் 109)
“ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2611)
References :
ஜசாக்கல்லாஹு ஹைரன்

No comments:

Post a Comment