1. டாக்டர். கீத் L. மூர் (Dr. Keith L. Moore)
கனடாவிலுள்ள டோரோண்டோ பல்கலைக்கழத்தில் உடற்கூறியல் உயிரணு உயிரியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் ஆவார். இவர் கருவியல் (Embryology) துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர். Clinically Oriented Anatomy (3rd Edition), The Developing Human (5th Edition, with T.V.N. Persaud) ஆகிய நூல்கள் உட்பட பல புகழ்பெற்ற மருத்துவ நூல்களையும் எழுதியுள்ளார். கனேடிய உடற்கூறியல் மருத்துவ கழகம், அமேரிக்க மருத்துவ உடற்கூறியல் கழகம் என்பவற்றின் முன்னாள் தலைவரும் ஆவார். கனேடிய உடற்கூறியல் துறையில் மிகவும் புகழ் பெற்ற J.C.B என்ற விருது கனேடிய உடற்கூறியல் மருத்துவ கழகத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
“கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை.எனக்குத் தெரிந்த வரை, இந்த 20 ஆம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர்.இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது”
2. டாக்டர். E. மார்ஷல் ஜான்ஸன் (Dr. E. Marshal Johnson)
இவர் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தின் பிளடெல்பியா நகரின் தாமஸ் ஜெப்(f)பர்ஸன் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் மற்றும் உயிரியல் வளர்ச்சியியல் துறைப் பேராசிரியராகவும் இருக்கின்றார். டேனியல் பாக் கல்வி நிறுவனத்தின் இயக்குனருமாவார். 200க்கும் மேற்பட்ட வெளியீடுகளின் ஆசிரியர்.
**முஹம்மது (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராகவே இருந்தார். ஆனால் இறைவனால் அவருக்கு அருளப்பட்ட வசனங்களை தன்னருகில் இருக்கும் தன் தோழர்களுக்கு ஓதிக் காண்பித்து, அதை அவர்கள் மணனமிட்டும், எழுதியும் பாதுகாத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட உரையில் அவர் குறிப்பிட்டதை அப்படியே மொழியாக்கம் செய்து தர வேண்டும் என்பதால், அவரது உரையில் மாற்றம் செய்யாமல், இந்த அடிக்குறிப்பைத் தந்துள்ளோம்.“திருமறைக் குர்ஆன் கருவின் வளர்நிலைகளின் வெளிஅமைப்பை மட்டும் விவரிக்கவில்லை. கருவின் உள்வளர்நிலைகளின், அவற்றின் படைப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை இன்றைய அறிவியலினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் நிகழ்வுகளில் இருந்து பிறழாது தனது கருத்துக்களை தெளிவாவே விவரித்துள்ளது.நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில், நான் தெளிவான முறையில் அறிந்தவற்றை மட்டுமே என்னால் கையாள இயலும். இதில் கருவியலையும், உயிரியல் வளர்நிலையியல் ஆகிய துறைகளை நான் நன்கு அறிவேன். எனக்கு மொழிமாற்றம் செய்து கொடுக்கப்பட்ட குர்ஆனின் வசனங்களையும் என்னால் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது.உங்கள் முன் ஒரு உதாரணத்தை சொன்னது போல், இந்த குர்ஆனிய வசனங்கள் வெளிப்பட்ட நாளில் இன்று உயிருடன் இருக்கும் என்னை உட்படுத்திப் பார்ப்பேனேயாகில், இன்று என்னால் அறிந்து கொள்ள முடிந்த விசயங்களையும், விவரிக்கப்பட்டுள்ளவைகளையும், குர்ஆனில் அன்று விவரிக்கப்பட்டது போல் என்னால் விவரிக்க இயலாது.முஹம்மது என்ற அந்தத் தனி மனிதர் எங்கோ சென்று இந்தத் தகவல்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்திற்கான எந்த ஆதாரத்தையும் என்னால் காண இயலவில்லை. ஆகையால்,**அன்று முஹம்மது எழுதிய இந்த எழுத்துக்களை அவர் பெற்றதில் ஏதோ ஒரு தெய்வீக தலையீடு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.”
3. டாக்டர். T. V. N பெர்சௌத்: (Dr. T. V. N. Persaud)
இவர் கனடாவின் வின்னிபெக் நகரில் உள்ள, மனிடோபா மருத்துவப் பல்கலைக்கழகத்தில், உடலியல், குழந்தை மற்றும் குழந்தை நலம், மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவம்: இனவிருத்தி அறிவியல் ஆகிய துறைகளில் பேராசிரியராவார்.
மருத்துவத் துறை சம்பந்தமாக 22 நூல்களும், 181 ஆய்வுரைக் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். 1991 ல் கனடாவின் உடலியல் மருத்துவக் கழகத்தின் மதிப்புமிக்க விருதான J.C.B. விருதை, இவரது உடலியல் துறை ஆய்வுக்காகப் பெற்றார்.
டாக்டர் கீத் மூரொடு இணைந்து வளரும் மனிதன் The Developing Human” என்ற நூலை எழுதினார்.
டாக்டர் கீத் மூரொடு இணைந்து வளரும் மனிதன் The Developing Human” என்ற நூலை எழுதினார்.
“முஹம்மது அவர்கள் படிக்கத் தெரியாத, எப்படி எழுதுவது என்று கூட அறியாத சாதரண மனிதராகத் தான் எனக்குத் தோன்றுகிறது. சுருங்கச் சொல்லப் போனால் அவர் ஒரு படிப்பறிவில்லாதவர்.
மேலும் நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களைப் பற்றியுமாகும். எழுத்தறிவு, படிப்பறிவே இல்லாத ஒருவர் இன்றைய அறிவியல் உண்மைகளுக்கு மாற்றமில்லாத வகையில், இவ்வளவு ஆழமான அறிவியல் கருத்துக்களை எவ்வாறு கூற முடிந்தது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றே.சந்தர்ப்பவசமாக நிகழ்ந்தது என்று கூட என்னால் கூற இயலவில்லை. ஏனெனில் ஒன்றல்ல இரண்டல்ல அதிகமான அளவில், மிகச் சரியான அளவில் அல்லவா அதன் அறிவியல் உண்மைகள் அமைந்துள்ளன. டாக்டர் மூர் அவர்களைப் போல எனக்கும், இது இறைவனால் (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) அருளப்பட்டது அல்லது வழங்கப்பட்ட (வேதம்) என்பதை ஏற்றுக்கொள்ள எந்த சிரமமும் தோன்றவில்லை”
4. டாக்டர். ஜோ லீ ஸிம்ப்ஸன் (Drive. Joe Leigh Simpson)
இவர் அமெரிக்காவிலுள்ள ஹோஸ்டன் மாநிலத்திலுள்ள பெய்லர் மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு மற்றும் பெண்கள் மருத்துவத் துறையின் தலைவரும் மற்றும் மூலக்கூற்று மற்றும் மனித பிறப்புரிமையியல் ஆகிய துறைகளில் பேராசிரியரும் ஆவார்.
“உங்கள் ஒவ்வொருவரின் படைப்புக்கான மூலப்பொருட்கள் யாவும் ஒன்று திரட்டப்பட்டு உங்கள் தாயின் கருவறையில் நாற்பது நாட்கள் வைக்கப்பபடுகின்றீர்கள்.”
(முஸ்லிம் ஹதீஸ் 2643, புகாரி 3208)
(முஸ்லிம் ஹதீஸ் 2643, புகாரி 3208)
“உங்கள் தாயின் கருவறையில் நாற்பத்தி இரண்டு நாட்கள் கடந்த பின், இறைவன் ஒரு வானவரை அனுப்பி வைத்து, அவர் (அக் கருவின்) செவி மற்றும் பார்வைப் புலன்களையும், தோல், சதை மற்றும் எலும்புகளையும் ஒருங்கமைக்கின்றார். பின்பு இறைவனிடம் அவர் இது ஆணா அல்லது பெண்ணா? என வினவ, இறைவன் தான் விரும்பியதைப் படைக்கின்றான்.”
(முஸ்லிம் 2645).
(முஸ்லிம் 2645).
பேராசிரியர் ஸிம்ப்ஸன் அவர்கள் இந்த இரண்டு ஹதீஸ்களையும் விரிவாக ஆய்வு செய்து பின்வருமாறு தெரிவித்தார்.
“ஆகவே, குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு ஹதீஸ்களும் நாற்பது நாட்களுக்கு முந்தைய முக்கியமான கருவளர்ச்சி நிலையின் குறிப்பான கால அளவை நமக்கு அளிக்கின்றது. மேலும், இந்த ஹதீஸ்கள் பதியப்பட்ட அந்தக் காலத்தில் கிடைத்த அறிவியல் அறிவை அடிப்படையாகக் கொண்டு இவைகள் உருவாக்கப்பட்டிருக்க முடியாது.
மதத்திற்கும் மரபணுவியலிற்கும் எந்தவிதமான பிரச்னை இல்லை என்பதை மாத்திரம் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவில்லை, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் அறிவியல் அணுகு முறைக்கு அருள் வெளிப்பாடுகளை சேர்ப்பதன் மூலம் மதம் அறிவியலுக்கே வழிகாட்டிட இயலும்.
மேலும், அறிவியலால் சரி காணப்பட்ட விசயங்கள் திருக்குர்ஆனில் உள்ளன.அதில் காணப்படும் இந்த அறிவு அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளன என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம் என்று நான் கருதுகின்றேன்”
5. டாக்டர். ஜெரால்ட் C. கோரிங்கர் (Dr. Gerald C. Goeringer)
இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கல உயிரியல் துறையில் கருவியல் பாடத்திட்டப் பேராசிரியராவார்.
“சில குர்ஆனிய வசனங்கள், மனித கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருந்து, அதாவது ஆணின் விந்தும், பெண்ணின் கரு முட்டையும் சந்தித்து ஒன்று சேர்ந்து கொண்ட நிலையிலிருந்து உறுப்புகளின் வளர்ச்சியினூடாக செல்லும் மனித கரு வளர்ச்சியின் நிலைகளைத் தெளிவாகவே விவரிக்கின்றது.
மேலும் மனித கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அவற்றை வகைப்படுத்துதல், கலைச் சொல்லாக்கம், பட்டியலிடுதல் போன்ற குறிப்பான தகவல்கள் இது வரை முன்பு எங்கும் இருந்ததில்லை.
இன்னும் சொல்லப் போனால், பரம்பரை பரம்பரையாக இலக்கியங்களில் வரக் கூடிய இது போன்ற அறிவியல் தகவல்கள் பல நூற்றாண்டுக் கால ஓட்டத்தில் அவை வழக்கிழந்து போயிருக்க வேண்டும். ஆனால், மனித வளர்ச்சியைப் பற்றி குர்ஆன் கூறியிருக்கும் கருத்துக்கள் இன்னும் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன”
6. பேராசிரியர். டிஜாடட் டிஜாசென் (Professor Tejatat Tejasen)
இவர் தாய்லாந்தில் உள்ள ஜியாங் மாய் நகரில் உள்ள ஜியாங் மாய் பல்கலைக்கழகத்தின் உடல்கூறு இயல் துறைப் பேராசிரியர் ஆவார்.
மேலும் நான் இங்கு வந்து கலந்து கொண்டு, லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற திருக் கலிமாவை மொழிந்து நான் முஸ்லிமாகி விட்டதன் மூலம், எல்லாவற்றையும் விட ஒரு விலைமதிப்பற்ற ஒரு பொருளைப் பொக்கிஷமாகவும் பெற்றுள்ளேன் ““கடந்த மூன்று வருடங்களாக திருமறைக் குர்ஆனில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருபனாக ஆகி விட்டேன். நான் அதில் கற்றுக் கொண்டதிலிருந்தும் மேலும் இந்த கருத்தரங்கின் மூலமாகவும் நான் படிப்பினையாகப் பெற்றுக் கொண்டது என்னவெனில், 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த திருமறைக் குர்ஆனில் உள்ள அனைத்தும் உண்மையே, அந்த உண்மைகளை இன்றுள்ள அறிவியலினால் நிருபிக்கவும் முடிந்துள்ளது.
இந்த உண்மைகளை இறைவன் மூலம் பெற்று நமக்கு வழங்கிய் எழுதவும் படிக்கவும் தெரியாத முஹம்மது அவர்கள், இறைவனின் தூதராகத் தான் இருந்திருக்க முடியும். இந்த உண்மைகளை முஹம்மது அவர்களுக்கு உதிப்பு மூலம் வழங்கியவன், உண்மையிலேயே ஒரு தகுதிவாய்ந்த படைப்பாளனாக (இறைவனாக) இருக்கின்றான். அந்தப் படைப்பாளி இறைவனாகத் தான் இருக்க முடியும்.எனவே, அந்த இறைவனையும், அவனது தூதர் முஹம்மது அவர்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நேரமாக இதைக் கருதி, லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை முன் மொழிந்து, அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனது திருத்தூதராகவும் ஏற்றுக் கொள்கின்றேன்.இந்த சிறந்த, வெற்றிகரமான கருத்தரங்கை ஒழுங்குடன் அமைத்துத் தந்த அனைவருக்கும் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கே நான் அறிவியல் நோக்கிலும் மற்றும் ஆன்மீக நோக்கிலும் மட்டும் ஆதாயம் அடையவில்லை, மாறாக, புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் என்னுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும், இங்கே கலந்து கொண்டவர்களில் பலரை நண்பர்களாக ஆக்கிக் கொண்ட சந்தர்ப்பத்தையும் ஆதாயமாகப் பெற்றுள்ளேன்.
7. பேராசியர் அல்ப்ரெட் க்ரோனர் (Alfred Kroner)
ஜெர்மனின்யின் மெயின்ஸ் பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞான பேராசிரியர். அவரது துறையில் முக்கிய சில விஞ்ஞானிகள் கோட்பாடுகள் எதிராக அவரது விமர்சித்த உலகின் புகழ் பெற்ற புவியியலாளர்.
“முஹம்மது எங்கேயிருந்து வந்தார் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இந்த பிரபஞ்சம் தோன்றிய விதம் குறித்தெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க முடியும் என்று சொல்வதெல்லாம் சாத்தியமே இல்லாதது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளுக்குள்தான் அவை பற்றியெல்லாம் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத் துணைகொண்டு விஞ்ஞானிகளால் இது இப்படித்தான் அது அப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வரமுடிந்திருக்கிறது.
அணுவிஞ்ஞானம் பற்றியெல்லால் ஒன்றுமே தெரியாத ஒரு மனிதருக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவராகவே இந்த பூமியும் மற்ற கோள்களும் தோன்றிய விதம் பற்றியும், மேலும் இங்கே நாம் விவாதித்துகொண்டிருந்த கேள்விகளுக்கான விடைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டிருக்கவே முடியாது.
இதையெல்லாம் சேர்த்து வைத்துப் பார்க்கும்போது சாதாரண எளிமையான ஒரு மனிதனுக்கான ஒரு எளிமையான விஞ்ஞான நூலாக குர்ஆன் இருக்கிறது என்று சொல்லலாம். 1400 ஆண்டுகளுக்கு முன் அதில் முஹம்மது சொல்லியிருக்கின்ற பல விடயங்களை அந்தக்காலத்து அறிவை வைத்து நிரூபிக்கவே முடியாது. இந்தக்காலத்து விஞ்ஞான முறைகளைக் கொண்டுதான் அவைகளை விளக்க முடியும்.”
8. யுஷிதி கூஷன் (Yushidi Kusan)
ஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர்.
“குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஈராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும் என்று கருதப்படுகிறேன் “
9. பேராசிரியர். ஆம்ஸ்ட்ராங் (Professor Armstrong)
அமெரிக்காவின் கான்சாஸ் பல்கலைக்கழக வானவியல் பேராசிரியராகவும், நாசாவில் பணிபுரியும் விஞ்ஞானியாகவும் இருப்பவர்.
“நாம் பார்த்த (குர்ஆனிய) வசனங்கள் மிகவும் ஆச்சரியமானவை. சாதாரண மனித அனுபவம் என்பதைத் தாண்டி வேறு எதோ ஒன்று நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். என்பதையே இந்த வசனங்கள் காட்டுகின்றன”
10. பேராசிரியர். வில்லியம் ஹே (William Hay)
அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக் கழகத்தின் சமுத்திரவியல் பேராசிரியர். அமெரிக்காவின் புகழ் பெற்ற கடல் விஞ்ஞானியாவார்.
“இம்மாதிரியான விஷயங்கள் பண்டைய வேதமான புனித குர்ஆனில் இருப்பது ரொம்ப சுவாரஸ்யமான விஷாயம். அத்தகவல்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும் என்று என்னால் தெரிந்து கொள்ள வழியில்லை.”
இவ்விடயங்கள் பற்றிய குர்ஆனின் வசனங்களின் மூலம் பற்றிக் கேட்கப்பட்டது
“அது கடவுளால் சொல்லப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்”
என்று பதில் சொன்னார்.
11. பேராசிரியர். துராஜ் ராவ் (Durja Rao)
சவுதி அரேபியா, ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில் கடல் நிலவியல் பேராசிரியர்.
“இந்த அறிவு 1400 ண்டுகளுக்கு முன்பு இருந்தது என்ற விஷயம் நம்புவதற்கே மிகவும் கடினமாக உள்ளது. சில விஷயங்களைப் பற்றி பொதுவாக சொல்ல முடிந்திருக்கலாம். ஆனால் மிகவும் ஆழமாக இதைப்பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமெனில், இது நிச்சயமாக சாதாரண மனித அறிவால் முடியாது. ஒரு சாதாரணம் மனிதனால் இந்த விடயம் பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாகச் சொல்லவே முடியாது. எனவே இந்த தகவல்கள் எல்லாம் தெய்வீக மூலத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.”
கடல் நிலவியல் ஜப்பான் பேராசிரியர்.
அவரது துறை சார்ந்த குர்ஆனிய வசனங்கள் தொடர்பில் கேட்கப்பட்டது.
“இவை நம்பமுடியாத, மிக, மிக மர்மமான தெரிகிறது. நீங்கள் கூறியவை உண்மையாக இருந்தால் இந்த புத்தகம் உண்மையில் ஒரு மிக குறிப்பிடத்தக்க புத்தகம்”
13. டாக்டர் மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille)
பாரிஸ் பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சை மையத்தின் முன்னாள் தலைவராக இருந்தார்.
“The Bible, The Qur’an and Science” (1976) என்ற உலகப்பிரசித்தி பெற்ற நூலின் ஆசிரியர். குர்ஆனில் குறிப்பிடப்பட்ட பிர்அவ்ன் மன்னனின் ‘மம்மி’ உடலை கெய்ரோ அருங்காட்சியகத்தில் சென்று ஆய்வு செய்து திருக்குர்னில் சொல்லப்பட உண்மைகளை இந்த நூலின் மூலம் உலகுக்கு தெரியப்படுத்தினார்.
ஹீப்ரூ, அரபிக் போன்ற வேத மொழிகளை நன்கு கற்றார். எகிப்திய இரகசியக் குறியீட்டு எழுத்து முறையையும் கற்றவர். இந்த அறிவுகளெல்லாம் இவருடைய பல்துறை ராய்ச்சிக்கு உதவியது. ஒரு மருத்துவர் என்ற முறையிலும் இவருடைய பங்களிப்பு முடிவான சில கருத்துக்களை அறிவுலகுக்கு வழங்கியுள்ளது.
இவருடயை “Mummies of the Pharaohs – Modern Medical Investigations” (St. Martins Press, 1990) என்ற நூலுக்கு ‘History Prize” என்ற விருது ப்ரெஞ்ச் அகாடமியால் வழங்கப்பட்டது.
“What is the Origin of Man” (Seghers, 1988), “Moses and Pharaoh, the Hebrews in Egypt”, (NTT Mediascope Inc, 1994), “Réflexions sur le Coran” (Mohamed Talbi & Maurice Bucaille, Seghers, 1989) என்பன இவரது பிரபல நூல்களாகும்.
“இந்த துறைகளைப் பற்றிய நமது இன்றைய அறிவை வைத்துப் பார்க்கும்போது, குர்ஆன் வெளியான காலகட்டத்தில் அதில் இப்படிப்பட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளது எப்படி என்பது விளக்க முடியாததாக உள்ளது.
முஹம்மதுதான் குர்ஆனின் ஆசிரியர் என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது தெளிவாக விளங்குகிறது. எழுதப்படிக்கத் தெரியாத ஒரு மனிதர் அரேபிய இலக்கியத்திலேயே மிகமுக்கியமான ஒரு இலக்கிய அந்தஸ்து கொண்ட ஒரு படைப்பாளியாக எப்படி இருக்க முடியும்?அவருடைய காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாலும் சொல்ல முடியாத விஞ்ஞான உண்மைகளையெல்லாம் அவரால் எப்படி சொல்ல முடிந்தது? அதுவும் ஒரு சின்ன தவறுகூட இல்லாமல்?”